சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஒரு 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகாரில், “இந்து மகா சபா”வின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற நபர் POCSO சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தற்போது வெளியிட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், அந்தச் சம்பவம் சிறுமி 13 வயதானபோது நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது POCSO சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
