தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக தேர்வுக்காக படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆள்மாராட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.