தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் ஆனது இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை ஆனது இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 18ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களில் இருந்தும் பெறப்படும் மெட்ரோ ரயில் ஆனது காலை 5 மணிக்கு பதிலாக காலை நான்கு மணி முதல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது