நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு கைரேகை வைக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பயோமெட்ரிக் வேலை செய்யாவிடில் குடும்ப அட்டைதாரர்களின் கண்களை ஸ்கேன் செய்து பொருள் தரப்படும் எனக் கூறிய அவர், தேர்தல் வாக்குறுதிப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 LED பல்புகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.