
ஜப்பான் நாட்டில் டோமிகோ இடூகா என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 116 வயது ஆகும் நிலையில் உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவருக்கு 116 வயது ஆகும் நிலையில் தற்போது வயது மூப்பின் காரணமாக காலமானார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மருத்துவர்கள் கண்காணிப்பில் உடல் நலக்குறைவினால் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் முதல் உலகப்போர் தொடங்குவதற்கு 6 வருடங்களுக்கு முன்பாக பிறந்த நிலையில் 2 உலகப்போர்கள், கொரோனா காலகட்டம் மற்றும் டெக்னாலஜி புரட்சியை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.