தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது அதிர்ச்சியை தருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது வேலியே பயிரை மேய்ந்தார் போன்று பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அருகே ஒரு 11ஆம் வகுப்பு மாணவிக்கு சுதாகர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் தர்மபுரி மாவட்ட நகர செயலாளர் என்பது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.