பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓபன் ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தியாவில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள், மசாலா படங்கள், கமர்சியல் ஹிட் காகவே உருவாக்கப்படும் படங்கள், குடும்ப படங்கள், பெரிய ஹீரோக்களின்  படங்கள் உள்ளிட்ட  வகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் இவையெதுவும் இல்லாமல், கதாநாயகன் யாராக இருந்தாலும் பரவாயில்லை, படம் எடுக்கப்பட்ட விதம் எளிமையாக இருந்தாலும் பரவாயில்லை, படத்தை இயக்கிய இயக்குனரை மட்டும் படம் பார்க்கச் செல்லும் மற்றொரு கூட்டமும் உண்டு. இவ்வகையான கூட்டத்திற்கு மிகவும் சொற்பமான இயக்குனர்களே தலைமை தாங்கி நிற்பார்கள். அந்த வகையில்,

தமிழ் இயக்குனர்களில் வெற்றிமாறன், ஜே ஞானவேல், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், ராம், மணிரத்தினம், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட  இயக்குனர்களை எடுத்துக்காட்டாக கூறலாம். அதே போல ஹாலிவுட்-இன்  ஆகச்சிறந்த இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகவுள்ள  ஓபன் ஹெய்மர்  திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் இந்தியாவில் அதிகமாகியுள்ளது.

இப்படத்திற்கு  போட்டியாக பார்பி என்னும் மற்றொரு ஹாலிவுட் திரைப்படமும் அதே தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் பார்பி திரைப்படத்தை விட ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கான டிக்கெட் பத்து மடங்கு அதிகம் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.