10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராதவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று விண்ணப்ப பதிவு தொடங்கிஇன்றோடு  முடிவடைகிறது. இன்றைக்கு விண்ணப்பிக்க தவறினால் ஜனவரி 5 முதல் 7ஆம் தேதி வரை சேவை மையத்துக்கு சென்று தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.