ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக மாறியதில் எம்எஸ் தோனி முக்கிய பங்கு வகித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

கேரியரின் தொடக்கத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரரானார். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் பட்டியலில் இணைந்த ரோஹித், தொடக்க ஆட்டக்காரராக வரும்போது அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த இந்திய அணிக்காக ஆறாவது பேட்ஸ்மேன் ஆனார். 2007ல் ரோஹித் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தாலும், அணியில் இடம் பிடிக்க கடுமையாக முயற்சி செய்தார். இருப்பினும், அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் முயற்சியால் ரோஹித் தொடக்க வீரரான பிறகு திரும்பிப் பார்க்கவில்லை என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்தார். தோனி அவரை தொடக்க ஆட்டக்காரராக ஊக்குவித்து ஆதரித்ததால்தான் ரோஹித்தின் கேரியர் உயர்ந்த நிலைக்கு சென்றதாக அவர் கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த கம்பீர், இந்திய அணியை பாராட்டினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நேரலையில் அவர் கூறியதாவது, “ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதல்ல. கேரியரில் ஏற்ற தாழ்வுகளை அனுபவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். தற்போது ரோஹித் கேப்டனாக இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளிப்பதை பார்க்கிறோம். ரோஹித் சர்மா இப்போது இப்படி இருக்க எம்எஸ் தோனி தான் முக்கிய காரணம். ஏனெனில் தோனி கேப்டனாக இருந்தபோது இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாக இருந்தார். மிக முக்கியமாக, ரோஹித் தனது கேரியரின் தொடக்கத்தில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டார். அப்படிப்பட்ட நேரத்தில் எம்.எஸ்.தோனி பக்கபலமாக நின்று வாய்ப்புகளை கொடுத்தார். இப்போது ரோஹித் தனது ஜூனியர்களுடன் அதையே செய்ய வேண்டும்.

ரோஹித்தை முதல்முறையாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின் போது சந்தித்தேன். எங்கள் அணிக்கு எதிரணியாக களம் இறங்கினார். நாங்கள் 350 ரன்கள் எடுத்தோம். ரோஹித் ஷர்மா 5வது இடத்தில் வந்து 130 ரன்கள் குவித்து தனது அணியை வென்றார். அப்போது வாசிம் ஜாபர் யார்? அவர் கேட்டார். அப்போதிருந்து, அவரிடம் ஏதோ ஒரு விசேஷம் இருப்பதாக உணர்ந்தேன்,” என்று கம்பீர் கூறினார்.

பொதுவாக தோனியை எப்போதும் விமர்சனம் செய்பவர் கவுதம் கம்பீர். சமீபத்தில் கூட 2011 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு ஒருவரை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிறீர்கள்..அணியின் வெற்றிக்கு காரணமான மற்ற வீரர்களையும் ஏன் பேச மறுக்குறீர்கள் என தோனியை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இந்த சூழலில் தற்போது அவர் தோனியை புகழ்ந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது..