தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டு இன்று இரவுக்குள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 பணம் வந்துவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் இருக்கும் சூழலில், மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். எனவே, இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்