முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800 என்ற விகிதாச்சாரத்தில் 1000 ரூபாயை வழங்கி வருகிறது. அதேபோன்று, 80 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.500ம், மாநில அரசு ரூ.500 என்ற விகிதாச்சாரத்தில் ரூ.1000 வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு மூத்த குடிமக்களிடம் இல்லை இதன் காரணமாக வெறும் 30% பேர் மட்டுமே முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். இதில், 16% மட்டுமே ஓய்வூதியத் தொகையை பெறுகின்றனர். திட்டத்திற்கு விண்ணப்பிக்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும் (அல்லது) Tamil Nadu e-Governance agency (TNeGA) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.