அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வருடம் அதானி குழுமம் பெரிய அளவில் பங்குமுறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றசாட்டை முன்வைத்த நிலையில் இன்று அதானி நிறுவனம் பங்குமுறை கேடுகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு நிறுவனங்களில் செபி நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவருடைய கணவருக்கும் பங்கு இருப்பதாக கூறி பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஹிண்டன்பர்க் நிறுவனமான முதலீட்டாளர்களை வீதியில் ஆழ்த்தும் விதமாக அறிக்கை வெளியிடுகிறது. ஒரு பங்கின் விலை முன்கூட்டியே இறங்குவதை கணித்து அதனை விற்று அவர்கள் லாபம் பார்க்கிறார்கள். இந்த அறிக்கையின் மூலம் பங்குச்சந்தையில் அந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடியில் லாபம் ஈட்டுகிறது. அந்த நிறுவனம் செபி  தலைவர் மீது கூறிய குற்றசாட்டில் உண்மை இருந்தால் நிச்சயம் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். அந்த நிறுவனம் செபி நோட்டீஸ் கொடுத்ததற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று கூறினார்.