
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் தேர்தல் பணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு பிரச்சாரம் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து தற்போது தனது அதிருப்தியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்ற திமுக வாக்குறுதி குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அதில் ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் மற்றும் மழைநீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெட்டி வாக்குறுதி கொடுத்த திமுக கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.