தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது தமிழகத்தின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு சில வரைமுறைகளின் அடிப்படையில் ஒரு கோடி பெண்களுக்கு இந்த உரிமை தொகையை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் தளர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தகுதியுடைய அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து ஒரு கோடியில் இருந்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம்ராஜனுடன் ஆலோசனை நடத்தினார். எனவே இது குறித்து நல்ல ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.