இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்தின் படி ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலை செய்யாமல் விடுமுறை நாட்களிலும் பணி செய்ததாக கணக்கு காட்டி சம்பளம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இதுதவிர 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து தன் சொந்த நிலத்தில் சில ஊழியர்கள் பணிகளை முடித்துக்கொள்வதாகவும் அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து குளறுபடிகளை தடுப்பதற்காக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பணியாட்களின் வருகை மற்றும் வருகை நாட்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து அதற்கு ஏற்றவாறு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதோடு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கி கணக்குடன் கட்டாயமாக ஆதார் கார்டு இணைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்கும் கால அவகாசம் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.