
நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் 100 நாள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வேலை திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தினசரி 319 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களை தகுதி நீக்கம் செய்த அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மொத்தம் 23 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது போலியான அட்டை, வேலை செய்ய விரும்பாதவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தொழிலாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 6.19 லட்சம் தொழிலாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதே போன்ற பீகார் மாநிலத்தில் 4.5 லட்சம் பேரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 3.3 லட்சம் பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.