தில்லி-மும்பை விரைவுச்சாலையின் முதற்கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அந்த சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தாா். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு என புகழாரம் சூட்டி இந்த மிக நீண்ட விரைவுச்சாலையின் வீடியோவை இணைத்திருந்தார்.

இதற்கிடையில் மக்கள் 6 சாலைகள் இருக்கிறது, மீதமுள்ள 4 சாலைகள் எங்கே? எனக் கேட்டு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். பெங்களூரு-மைசூரு இடையில் இணைப்பை உருவாக்கும் 10 வழி விரைவுச்சாலையின் வீடியோவில் 6 வழிப்பாதை மட்டுமே இருப்பதாக எண்கள் இட்டு புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் வழியே இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது.