இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் எளிதான முறையில் கடன் செயலிகள் மூலம் கடன் வழங்குவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு இளைஞர்களை ஏமாற்றி பல மோசடி வேலைகள் நடைபெறுகிறது. கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதில் வங்கிகளை போன்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவை இல்லாததால் பலரும் கடன் செயலிகளில் எளிதாக கடனை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் பின்னாளில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் கடன் செயலியில் கடன் பெறும்போது எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். நீங்கள் ஒரு கடன் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை நன்கு யோசித்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

நீங்கள் கடன் பெறும் செயலி ரிசர்வ் வங்கியிடம் வங்கி சாரா நிதி நிறுவனம் என்று ஆவணத்தை பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் கடன் பெறும் செயலியிடம் செல்போன் நம்பர் மற்றும் இணையதள முகவரி போன்றவற்றை வாங்கி ஒருமுறைக்கு இருமுறை அந்த நிறுவனத்தை பற்றி தெரிந்து தெரிந்து கொள்வது நல்லது. அதன் பிறகு நீங்கள் கடன் பெரும் செயலிகள் உங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற விவரங்களை பெற்றுக்கொண்டு தவறான முறையில் மோசடி செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே கடன் செயலியில் கவனமுடன் பெறுவதற்கு முன்பாக மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.