இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த வருடத்தில் குளிர் காலத்தில் கடும் உறைபனி காணப்பட்டது. பல பகுதிகளிலும் பனிப்பொழிவு நிலவியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் கடும் குளிரால் ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த கடுங்குளிர் ஒரு புறம் மக்களை வாட்டியபோதும், வருகிற கோடைக்காலம் மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என்று எச்சரிக்கை வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ராஜீவன் கூறியதாவது, 2023-ஆம் வருடத்தில் கோடை கடுமையாக இருக்கும் என கூறியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளி மண்டல நிர்வாகம் (என்.ஓ.ஏ.ஏ.) அமைப்பு சென்ற வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் எல் நினோ தாக்கம் 58 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.