டிஜிலாக்கர் என்பது அரசில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் முன்னெடுக்கப்படும் முன் மாதிரியான திட்டமாகும். இதன் வாயிலாக ஒவ்வொரு குடிமக்களும் சான்றிதழ்கள் (அ) ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள இயலும்.

கையில் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்வதற்கு பதில் டிஜிட்டல் வடிவில் நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனிலேயே வைத்துக்கொள்ள இயலும். அதுமட்டுமின்றி டிஜிலாக்கரின் வாயிலாக ஆவணங்களை நேரடியாக கையில் வைத்திருக்க தேவையில்லை. அதோடு சில நேரங்களில் ஆவணங்கள் தொலைந்தாலும் கவலைப்பட தேவையில்லை.