கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் அபிஷேக் என்ற 10-ம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 600-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று 6 பாடங்களிலும் தோல்வியடைந்தான். இது பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்திய நிலையிலும் தன் மகன் கவலைப்படக்கூடாது என்று நினைத்தனர். அதே நேரத்தில் அபிஷேக் தேர்வு முடிவுகளை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் தங்கள் மகனை அதிலிருந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர்கள் கேக் வாங்கி வந்து  மதிப்பெண்ணை அதில் எழுதி அக்கம் பக்கத்தினரை அழைத்து அதனை வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியின் போது கண்டிப்பாக மறுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நான் வெற்றி பெறுவேன் என்று அபிஷேக்  கூறினான். மேலும் பொதுவாக பெற்றோர் குழந்தைகள் சரியாக படிக்க விடில் அடிப்பதோடு மார்க் குறைவாக வந்தால் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் ஒரு பெற்றோர் வித்தியாசமாக தங்கள் மகன் வேதனை அடையக் கூடாது என்பதற்காக இப்படி பரிட்சையில் பெயிலானதை கேக் வெட்டி கொண்டாடியது பேசும் பொருளாக மாறி உள்ளது.