கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கர்நாடகா முதலமைச்சர் பதவி பிரச்சினை தீர்ந்துள்ள சூழலில், அமைச்சர்கள் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 10 புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் பதவியை பெறுவதற்கு சில மூத்தத்தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அதேநேரம் காங்கிரஸ் தலைவர்கள் சந்தோஷ் லாட், சரன் பிரகாஷ் பாட்டீல், பீ. கே.ஹரிபிரசாத், எம். பி. பாட்டீல் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.