கரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த யுவராஜ்(41) என்பவர் தாளாளராக வேலை பார்த்தார். அதே பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு யுவராஜும் நிலவொளியும் சேர்ந்து பத்தாம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி யுவராஜ், நிலவொளி ஆகிய இரண்டு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 7 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.