
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடமானது பத்தாம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாளின் முதல் பகுதியில் ஒரு மதிப்பெண் வினாவிற்கான இணைச்சொல் மற்றும் எதிர்ச்சொல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று முதல் மூன்று வரையிலான வினாக்கள் இணை சொல்லாகவும், நான்கு முதல் ஆறு வரையிலான வினாக்கள் எதிர்சொலாகவும் கேட்பது வழக்கம். ஆனால் இந்த தடவை ஒன்று முதல் ஆறு வரையிலான வினாக்களுக்கு இணைச்சொல் விடை அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனால் 4, 5 மற்றும் 6 வினாக்களுக்கு கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வினாக்களுக்கு எந்த விடை அளித்தாலும் முழு மதிப்பெண் அளிக்க அரசு தேர்வு இயக்ககம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல 28க்கு (2 மதிப்பெண்) பதில் எழுத முயற்சித்தால் முழு மதிப்பெண் வழங்கலாம் என்று உத்தரவு விடப்பட்டுள்ளது.