மத்திய பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ரூ.7 கோடி செலுத்த சொல்லி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்கேடா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் உஷா சோனி. இவர் கடந்த 2013 ஆம் வருடம் இறந்தார்.

இந்த நிலையில், ஜூலை 26ஆம் தேதி, உஷா சோனியின் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் வந்தது. 7.55 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பெதுல் மாவட்டத்தில் 44 பேருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை நோட்டீஸ் வந்துள்ளது.