
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை நாகரிகமற்றவர்கள் என்று நாடாளுமன்றத்தில் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் 100 முறை கூட நான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் வேலூரில் திமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் மத்திய மந்திரி திமுகவினர் நாகரிகமற்றவர்கள் என்று சொன்னது பற்றி பேசினார்.
அவர் பேசியதாவது, தமிழனின் நாகரிகம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது தான். ஆனால் வட நாட்டவன் அப்படி கிடையாது. அங்கு ஐந்து பேர் இருந்தாலும் சரி பத்து பேர் இருந்தாலும் சரி ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வந்து விடுவான். இப்படிப்பட்ட நாற்றம் எடுத்த நாகரிகம் தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்து விடுவான் ஜாக்கிரதை என்று கூறினார். மேலும் அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது.