ஜெர்மனியின் மோனிச் நகரில் அந்தரத்தில் 10 அடி உயரத்தில் தொங்கியவாறு சுவிட்சர்லாந்து இசை கலைஞர் அலைன் ரோஸே பியானோ இசைத்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. விடியல் இருளின் நடுவே பியானோ மட்டும் வெளிச்சம் பரவி இருந்த வித்தியாசமான தோற்றத்தில் இயற்கையான இசையை உள்வாங்கி உருவாக்கப்பட்ட ராக ஆலாபனை பலரையும் கவர்ந்தது.

பனிக்கால சந்திர கிரகணத்தை முன்னிட்டு அரங்கேற்றம் செய்யப்பட்ட அற்புதமான ராக ஆலாபனையில் இயற்கையோடு கலந்த பணி சாரல் எழுப்பும் ஓசை, குளிர வைக்கும் காற்றின் பிசிரல் ஒலி, சடசடக்கும் மழையின் சத்தம் மற்றும் பறவைகளின் கீச்சில்கள் பதிவு செய்யப்பட்டு அற்புத கலவையாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான வெர்டிகல் ஆர்ட் வகை இசை நிகழ்ச்சியில் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பல அடுக்கு உடைகளை அணிந்து வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்.