சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரசிகர்கள் லியோ திரைப்படத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விஜய் மற்றும் லோகேஷ் 2வது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்தது, பின் சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, 20 ஆண்டுகளுக்கு மேல் படங்கள் இயக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு 10 படங்களை இயக்கி விட்டு நான் திரையுலகில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் சொன்ன இந்த விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.