மணிப்பூர் மாநில அரசு இந்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு வாரிய தேர்வுக்கான தர நிர்ணய முறையை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. அதனைப் போலவே தேர்வுக்கு வராமல் விடுப்பு எடுத்தால் அந்தப் பாடத்திற்கு எந்த பிரிவும் தரவரிசையும் வழங்கப்பட மாட்டாது.

இந்த புதிய மாற்றமான கிரேடிங் முறையில் மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண் மற்றும் மொத்தம் என எதுவும் காட்டப்படாது. வெறும் தேர்ச்சி அல்லது தோல்வி மட்டுமே காட்டப்படும். அதனைப் போலவே மாணவர்கள் 91 முதல் 100 வரை A1, 81 முதல் 90 வரை பெறுபவர்களுக்கு A2, 21 முதல் 30 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு E1 வழங்கப்படும். அதுவே E2 பெற்றால் தோல்வியுற்றதாக குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.