
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21ஆவது போட்டி இன்றைய தினம் இமாச்சல பிரதேசத்தின் தர்மஷாலா மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா V நியூசிலாந்து மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரன் 75, டேரில் மிட்செல் 130 ரன் எடுக்க நிணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டையும் இழந்து 273 ரன் எடுத்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து இந்திய அணி களமிறங்க 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தாரர். உலக கோப்பை தொடரில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் X பக்கத்தில்,
நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்! இது ஒரு அற்புதமான கூட்டு முயற்சியாகும், அனைவரும் பங்களித்தனர். களத்தில் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது என வாழ்த்தி உள்ளார்.
Congratulations to the Indian cricket team on their splendid victory against New Zealand! It was a splendid team effort where everybody contributed. The dedication and skill on the field was exemplary.
— Narendra Modi (@narendramodi) October 22, 2023