தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை தோற்றத்தை ஏற்படுத்த பாக்கிறார்கள். அது போலியானது. இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக முறைப்படி தமிழ்நாடு அரசு உரிய வகையில நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்கு தங்கள் மூலமாக தெரிவித்து கொள்ளுகிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… இங்கு மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் மிகுந்த அக்கறையோடு,  இந்த பிரச்சனையை எடுத்து பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலை பற்றி அதிமுக பேசுகிற பொழுது…  நான் கேக்குற ஒரே கேள்வி…  நீங்கள் பத்து ஆண்டு கால ஆட்சியில இருந்தப்போ கண்ணை மூடி கொண்டிருந்ததற்கு என்ன காரணம் ? அதை நான் இப்பொழுது அறிய விரும்புகிறேன்.

தருமபுரியிலே பேருந்தில் பயணித்த மாணவிகள் உயிரோடு பட்டபகலில் எரித்தவர்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன் விடுதலை செய்த உங்களுடைய அதிமுக ஆட்சி. ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை ? என்பது தான் என் கேள்வி.

இதை ஆணவத்தோடு அல்ல,  அடக்கத்தோடு நான் கேக்கிற கேள்வி .. ஆட்சியில் இருந்த பொழுது இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காமல், அதுமட்டுமல்ல குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு… எல்லாவற்றையும் கண்மூடி ஆதரித்த அதிமுக,  இப்பொழுது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர் பாசம் ஏன் ? என்று இங்கே இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும், எங்களுக்கும் புரியும். அதைவிட சிறுபான்மை சகோதர – சகோதரிகளுக்கு நன்றாகவே தெரியும் என்பதை மாத்திரம் இங்கே பதிவு செய்து,  இந்த விளக்கத்தோடு நிறைவு செய்கிறேன் என பேசி முடிந்த்தார்.