
ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்தத் தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் 1.3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது.
இதனை பாகிஸ்தானின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்க இருந்த நிலையில், தற்போது அந்த கடனை வழங்குவது குறித்து ஐ.எம்.எப் அமைப்பு மதிப்பாய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சர்வதேச நாணய நிதியகத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்ததாவது, பாகிஸ்தானிற்கு 1.3 மில்லியன் டாலர் கடனை வழங்குவது குறித்து ஐ.எம்.எப் ஆழமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நீதி எதற்காக பெறப்பட்டது? அதற்காக பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு எதற்காகவாவது பயன்படுத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து ஐ.எம்.எப் அமைப்பு இன்று மதிப்பாய்வு செய்ய உள்ளது.