
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா (22) என்ற மகள் இருக்கிறார். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது ரம்யா குரும்பலூர் பகுதியில் உள்ள ஒரு அரசு கலை கல்லூரியில் படித்தார். அப்போது தனியார் மினி பேருந்தில் நடத்துனராக இருந்த தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தான் தன்னுடைய கணவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணம் நடைபெற்றது ரம்யாவுக்கு தெரியவந்தது. அதாவது சௌந்தர்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த வள்ளி ஆகிய இரண்டு பெண்களை காதலித்து தினேஷ் திருமணம் செய்துள்ளார். இந்த உண்மை தெரிந்த பிறகு ரம்யா தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சௌந்தர்யாவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.