திருப்பதி ஏழுமலையானை  தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வழக்கமாக வார இறுதி நாட்களில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாசம் என்பதினால் அதிக அளவில் கூட்டம் இருக்கிறது. இதனால் 48 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்  ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருப்பதிக்கு செல்லும் பெற்றோர் சுபதம் தரிசனத்தில் எளிதாக சாமி தரிசனம் செய்யலாம்.

இதற்கான வழிமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் இந்த தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த சுபதம் தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, குழந்தையின் ஆதார் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை காண்பித்த பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.