முதல்வரின் காலை உணவு திட்டம் மூலமாக அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் இனிமேல் காலை நேரத்திலும் இலவச உணவை பெறலாம். இது முதல் கட்டமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1545 பள்ளியில் மட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது . இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தை மாநில முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் விரிவு படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது அதன்படி வரும் 25ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்வர் இந்த விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.