
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணி சத்யா, தனிப்படை காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். கைதான சத்யா, காவல்நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது,”என் குடும்பத்தை பற்றி யாரும் தவறாக எழுதாதீர்கள்.
காசு உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நிரூபித்துவிட்டார்கள். நான் வெளியே வந்த பிறகு என் மீது தவறில்லை என்று நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் காட்டுகிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கல்யாண ராணி சத்யா, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.