திருப்பதி ஏழுமலையானை  தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வழக்கமாக வார இறுதி நாட்களில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாசம் என்பதினால் அதிக அளவில் கூட்டம் இருக்கிறது. இதனால் 48 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்   திருப்பதியில் வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

நாள் ஒன்றுக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.