கனடா நாட்டில் உள்ள மான்ட்கன் நகரில் நீர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தினசரி பொழுதுபோக்கிற்காக ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவில் சம்பவ நாளில் 25 வயதுடைய இந்திய வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் அங்கு வந்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக 12 பேர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். அவரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிடாத நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தாயார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.