
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே பொதுப்பணித்துறை நிலத்தில் உள்ள தேக்கு மரங்களை வெட்டிய வழக்கில், ஆடிட்டரான ரவிச்சந்திரன் என்பவரை விடுவிக்க ரூ.1 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக, காவல் ஆய்வாளர் நெப்போலியன், குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடிட்டர் ரவிந்திரனுக்கு சொந்தமான இடத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு இழப்பீடு அளித்து பொதுப்பணித்துறை கைப்பற்றியது. அதனை அடுத்து, அந்த நிலத்தில் இருந்த 35 தேக்கு மரங்களை அவர் வெட்டியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து ரவிச்சந்திரனை விடுவிக்க, ஆய்வாளர் நெப்போலியன் சிறிது சிறிதாக ரூ.1 கோடி வரை தன்னிடம் லஞ்சமாக பெற்றதாக ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசா ரசிச்சந்திரனை கைது செய்தனர்.