வியட்நாம் நாட்டை சேர்ந்த தாய் நகோக் என்பவர் வசித்து வருகிறார். அந்தப் பகுதியில் இவர் பெயரைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் தூங்காத மனிதர் என்று அனைவருக்கும் தெரியும். கடந்த 1973 ஆம் ஆண்டில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்கு பிறகு இவருக்கு தூக்கம் இல்லாமல் போய் உள்ளது. எவ்வளவு முயற்சி செய்தாலும் இவருக்கு தூக்கம் மட்டும் கடந்த அறுபது ஆண்டுகளாக வரவே இல்லையாம். மது அருந்துவது மற்றும் மருத்துவரை சந்தித்து தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வது என பலவற்றை செய்தும் இவருக்கு தூக்கம் வரவில்லை.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிய வந்தது. இது குறித்து அந்த நபர் கூறுகையில், 20 வயதிலிருந்து தூக்கம் வரவில்லை. சில நேரங்களில் தூங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கும். ஆனால் தூங்காமல் இருப்பது மிக வெறுமையாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் ஆசையும் வாழ்வில் ஒரு நாளாவது தூங்கி விட வேண்டும் என்பதுதான் என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்