மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பாலியல் பலாத்கார வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் 73 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதாவது கடந்த 1987 ஆம் ஆண்டு அந்த முதியவரின் நிறுவனத்தில் பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் அவர் கட்டாய உறவு வைத்தார். அதன்படி 31 வருடங்களாக அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். கடந்த 1987 முதல் 2017 வரை அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 1993ஆம் ஆண்டு அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய முதியவர் நீதான் என்னுடைய 2-வது மனைவி என்று தெரிவித்துள்ளார். அதோடு அந்த பெண்ணை வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கவில்லை.
கடந்த 1996 ஆம் ஆண்டு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த அலுவலகத்தின் முழு பொறுப்பையும் பெண் கவனித்து வந்தார். அதன்பின் சில காரணங்களால் அவர் விடுமுறை எடுத்துவிட்டு சென்ற நிலையில் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த பெண் முதியவரை தொடர்பு கொண்ட போது அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு பிற ஆவணங்களையும் தர மறுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் தன்னை கட்டாயப்படுத்தி 31 வருடங்களாக முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அந்த பெண் மேஜர் என்று கூறினார்.
அதன் பிறகு அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்று தெரிந்தும் இரண்டாவது திருமணத்திற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று தெரிந்தும் அவருடன் பாலியல் உறவில் பெண் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் 31 ஒரு வருடங்கள் பாலியல் உறவில் இருந்த நிலையில் தற்போது உறவு கசந்ததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களில் பலமுறை அவருடன் தொடர்பை துண்டித்து விட்டு புகார் அளிக்க அந்த பெண்ணுக்கு வாய்ப்புகள் இருந்துள்ளது. இருப்பினும் அந்த பெண் அதை செய்யவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் பாலியல் பலாத்காரம் உறவில் இருந்து விட்டு முதியவருக்கு எதிராக பெண் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.