
ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வருமான வரி செலுத்த வேண்டும். இது அனைவருடைய கடமை. இது தொடர்பான அறிவிப்புகளை அவ்வப்போது வருமான வரித்துறை வெளியிட்டு வருகின்றது. அதன்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட அனுபவங்களை நெட்டிசன்கள் X பக்கத்தில் விவாதித்து வருகிறார்கள். அதில் டெல்லியை சேர்ந்த ஒருவர், IT நோட்டீசை சரி செய்ய ஆடிட்டருக்கு 50000 கட்டணம் கொடுத்ததாகவும், ஆனால் கணக்கில் ஒரு ரூபாய் மட்டுமே மிஸ்மேட்ச் இருந்ததாகவும் பதிவிட்டு இருப்பது வைரலாகி வருகின்றது.