உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சாப்ட்வேர்  இன்ஜினியர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் குமார் (வயது 38)  மதுராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.   சம்பவத்தன்று இரவு அந்தப் பெண் குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது, உமேஷ் மேல்தளத்தில் உள்ள சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். உடனே ஹோட்டல் ஊழியர்கள் அறைக்குள் சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த சம்பவத்திற்கு முன்னதாக இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதுவே தற்கொலையின் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான  கடிதம் எதுவும் அறையில் சிக்கவில்லை. மனைவியுடன் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்திருந்த உமேஷ், விவாகரத்து மனுவும் தாக்கல் செய்திருந்ததாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்தப் பெண்  போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.