
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சித்திரவாடி கிராமத்தில் ஜெயராஜ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூச்சி மருந்து கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜுக்கும் பவுன்சூரை சேர்ந்த சங்கீதா(32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகினர் திருமணமான சங்கீதா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்தார்.
கடந்த வாரம் புதன்கிழமை ஜெயராஜ், சங்கீதாவும் இருசக்கர வாகனத்தில் மகாபலிபுரத்திற்கு சென்று தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து உணவு வாங்குவதற்காக ஜெயராஜ் வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது தூக்கில் தொங்கியபடி சங்கீதா இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்க பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சங்கீதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனால் ஜெயராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஆசை வார்த்தைகள் கூறி சங்கீதாவை ஜெயராஜ் மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்து ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். சங்கீதாவுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருந்ததாக ஜெயராஜ் சந்தேகப்பட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபத்தில் ஜெயராஜ் துப்பட்டாவால் சங்கீதாவின் கருத்து இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.