மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர், அங்கு சாப்பிட்ட எளிய உணவுகளுக்கு வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் ஆர்டர் செய்த மூன்று வேகவைத்த முட்டைகளுக்கு 500 ரூபாயும், ஒரு உருளைக்கிழங்கு பரோட்டாவிற்கு 1,100 ரூபாயும் என ஒட்டுமொத்தமாக சுமார் 2,300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ஹோட்டல் நிர்வாகத்தின் இத்தகைய அதிகப்படியான விலையை விமர்சிக்கும் அதேவேளையில், ஐந்து நட்சத்திர விடுதிகளின் வசதிகள், சேவை மற்றும் சூழலுக்காகவே இந்தத் தொகை வசூலிக்கப்படுவதாகப் பலர் வாதிடுகின்றனர்.
5 Star Hotel Food Price: तीन उबले अंडे 500 के, 1100 का एक पराठा! मुंबई होटल का बिल देख शख्स बोला- सामान्य खाने का इतना चार्ज? https://t.co/nYkvlvXxWg
“>
முன்னதாக, நடிகர் ராகுல் போஸ் இரண்டு வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் வசூலிக்கப்பட்டதைக் கண்டித்த சம்பவத்தை பலரும் நினைவுபடுத்தி வருகின்றனர். ஹோட்டல் உணவு விலைகள் குறித்த இந்த விவாதம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
