நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும் காமெடியை பதிவிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற வித்யாசமான ஆஃபரை சேலத்தை சேர்ந்த ஒரு வியாபாரி அறிமுகப்படுத்தியுள்ளார். முகமது காசிம் என்ற விற்பனையாளர் தனது கடையில் இந்த ஆஃபரை காமெடி நடிகர் பெஞ்சமினை வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த ஆஃபரை வழங்க உள்ளதாக அந்த வியாபாரி தெரிவித்துள்ளார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹெல்மெட் விலை ரூ.349.