தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அஸ்வின் மாணவர்களிடம் எந்த மொழியில் பேச என்று கேட்டுவிட்டு ஆங்கிலத்தில் பேசவா என்று கூறிய போது மாணவர்கள் பலத்த கரகோஷம் எழுப்புங்கள் என்றார். அப்போது அஸ்வின் தமிழில் பேச வா என்று கேட்டபோது இன்னும் மாணவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். இறுதியாக ஹிந்தியில் பேசவா என்று கேட்டபோது மாணவர்கள் அமைதியாகிவிட்டனர். அப்போது அஸ்வின் ஹிந்தி நம்முடைய தேசிய மொழி கிடையாது அது வெறும் ஆட்சி மொழி தான் என்று கூறிவிட்டு தமிழில் பேச தொடங்கினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அண்ணாமலை கூறியதாவது, அது உண்மைதான் ஹிந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல. இதனை என்னுடைய அருமை நண்பர் அஸ்வின் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. இந்த அண்ணாமலை கூட சொல்வேன். ஹிந்தி தேசிய மொழி கிடையாது அது ஒரு இணைப்பு மொழிதான். இதனை நம்முடைய வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் எந்த இடத்திலும் இந்தி தேசிய மொழி என்று கூறவில்லை. அஸ்வின் சொன்னது ஒரு சரியான கருத்து என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்  அஸ்வின் சொன்ன கருத்து பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.