
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக வீட்டிலே டிஜிட்டல் அரெஸ்ட், போலீஸ் அதிகாரி போன் பண்ணுவதாக கூறி மிரட்டல் என பல்வேறு விதமாக நூதன முறையில் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வேதனையில் தவிக்கிறார்கள். அதாவது உங்கள் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஏதாவது ஒரு வழக்கில் சிக்கி உள்ளீர்கள். நான் போலீஸ் அதிகாரி பேசுகிறேன். உடனடியாக நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிருக்கு பணம் செலுத்துங்கள் என்றெல்லாம் கூறி மக்களை நம்ப வைத்து மோசடி செய்கிறார்கள். இது போன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
முன்னதாக செல்போனுக்கு லிங்க் அனுப்புவது, குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசுதல் பகுதி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மோசடிகள் நடைபெற்றது. இந்த மோசடிகள் நடைபெற்றாலும் தற்போது புதுவிதமான முறைகளிலும் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோன்ற ஒரு மோசடிதான் தற்போது அகமதாபாத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது அகமதாபாத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு டெல்லி சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அவர் அந்த பெண்ணின் பெயரில் போதை மருந்துகள் மற்றும் லேப்டாப்புகள் போன்றவைகள் சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்தார். அதன் பிறகு விசாரணை என்று கூறி அந்த பெண்ணை மிரட்டி வெப்கேமரா முன்பாக ஆடைகளை கழட்டுமாறு மிரட்டியுள்ளார். பயந்து போன அந்த பெண்ணும் ஆடைகளை கழட்டியுள்ளார். அதோடு சிறைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் தன் வங்கி கணக்கில் இருந்த 5 லட்ச ரூபாயை மொத்தமாக அனுப்பிவிட்டார். அதன் பின்னர் தான் ஏமாந்த விஷயம் தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.