பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், களத்தில் நடக்கும் அதிரடிகளை விட களத்திற்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில், ‘ராவல்பிண்டிஸ்’ (Rawalpindiz) அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்தப் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள தனது அணியைத் தட்டி எழுப்ப நினைத்த ரிஸ்வான், வீரர்கள் அனைவரையும் வட்டமாக நிற்க வைத்து ஆவேசமாக உரையாற்றினார்.

ஆனால், அவர் முழுக்க முழுக்க உருது மொழியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேச, அங்கிருந்த வெளிநாட்டு வீரர்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்றே புரியாமல் திருதிருவென விழித்தனர்.

ரிஸ்வான் சீரியஸாகப் பேச, வெளிநாட்டு வீரர்கள் புரியாமல் முழிக்கும் இந்த ‘தமாஷ்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராவல்பிண்டிஸ் அணி தனது அடுத்த போட்டியில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.