இஸ்ரேல் மற்றும் கமாஸ் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசாவை சேர்ந்த ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் கமாஸ் பிணைய கைதிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போரை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அதோடு ஹமாசை ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஜ் அல் தின் கசாப் அவர்களையும் கொலை செய்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேலும் ஹஸ்புல்லா அமைப்பின் தலைவர்களையும் இஸ்ரேல் கொன்று வரும் நிலையில் தற்போது கமாஸ் அமைப்பின் தலைவர்களையும் கொலை செய்து வருகிறது. மேலும் உலக நாடுகள் பலவும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் கமாஸ் அமைப்பினை முற்றிலும் ஒலிக்கும் வரை போரை நிறுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதோடு அந்த அமைப்பையும் கொலை செய்து வருகிறது.